இலங்கையில் மேலும் 93 கொவிட் மரணங்கள்

இலங்கையில் மேலும் 93 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.  உயிரிழந்தவர்களில் 48 பெண்களும் 45 ஆண்களும் அடங்குகின்றனர்.   சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று முன்தினம் இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைகிறது : மருத்துவர் ஆனந்த விஜே விக்கிரம

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருகின்றது. வைத்தியசாலைகளில் ஏற்பட்டிருந்த இடப்பற்றாக்குறையும் தற்போது இல்லை. எனவே இந் நிலைமையை தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.   சுகாதார நடைமுறைகளை தொடர்ச்சியாகப் பின்பற்றினால் இனிவரும் நாட்களில் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் குறைவடையும்.”…

இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களின் விலையை 200 ரூபாவால் அதிகரிக்க முடிவு?

இறக்குமதி செய்யப்பட்ட பால்மாக்களின் விலையை 200 ரூபாவால் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுடனான சந்திப்பின் பின்னர் பால்மா இறக்குமதியாளர்கள்  இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ பால்மாவின் விலையை 200 ரூபாவால் அதிகரிக்க  தீர்மானித்துள்ளனர். இச்சந்திப்பின்போது பால்மா இறக்குமதியாளர்கள் பல…

அரியாலையில் காதலனுடன் சேர்ந்து கணவனை அடித்துக்கொன்ற மனைவி!

தகாத உறவால் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து காதலனுடன் சேரந்து மனைவி திருகுவளையால் கணவரை அடித்துக் கொலை செய்த சம்பவம் யாழ்ப்பாணம், அரியாலை – பூம்புகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற இந்தப் பயங்கரச் சம்பவத்தில், அரியாலை…

யாழில் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் பங்கேற்ற 35 பேர் கைது

யாழ்ப்பாணத்தில் இரு பிறந்தநாள் நிகழ்வுகளில் பங்கேற்ற 35 இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். திருநெல்வேலியில் பிரபல ஹோட்டல் ஒன்றிலும், ஓட்டுமடத்தில் வீடு ஒன்றிலும் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் இடம்பெறுவதாக யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்தது.   இதன் அடிப்படையிலேயே இரு பிறந்த…

இலங்கையில் கொரோனாவால் மேலும் 103 பேர் உயிரிழப்பு

இலங்கையில் நேற்று முன்தினம் 103 பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தனர் என்று அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.நாட்டில் 40 நாட்களின் பின்னர் முதல் தடவையாக கொரோனா மரணங்களின் எண்ணிக்கை கடந்த வெள்ளிக்கிழமை நூறை விடக் குறைவாகப் பதிவாகி யிருந்தது. அன்றைய தினம்…

மதுபானச் சாலைகளைத் திறக்க அனுமதித்தமை குறித்து இலங்கை மருத்துவ சங்கம் அதிருப்தி

மதுபான விற்பனை நிலையங்கள் திறக்க அனுமதிக்கப்பட்டமை குறித்து கடும் விசனம் வெளியிட்டுள்ள மருத்துவ அமைப்புகள் இதன் காரணமாக கொவிட் குறித்து வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்கள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன எனக் குறிப்பிட்டுள்ளன. மதுபான விற்பனை நிலையங்களைத் திறக்க அனுமதிப்பது என்பது நாடு தற்போது…

ஓமந்தையில் ஆலயத் திருவிழாவில் பங்கேற்ற 11 பேருக்கு கொரோனா

வவுனியா ஓமந்தைப் பகுதியில் இடம்பெற்ற ஆலயத் திருவிழாவில் கலந்துகொண்ட பலருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டதையடுத்து பலர் தனிமைப்படுத்தப்பட்டனர்.  குறித்த ஆலயத்தில் திருவிழா இடம்பெற்று வருவதுடன் அதிகமானோர் கலந்துகொண்டுள்ளனர் என சுகாதாரத் தரப்பினருக்கு முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்தது.  இதனையடுத்து குறித்த ஆலயத்துக்கு நேற்று…

வவுனியா முதியோர் இல்லத்தில் 50 பேருக்கு கொரோனா; மூவர் உயிரிழப்பு

வவுனியாவிலுள்ள முதியோர் காப்பகம் ஒன்றில் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், அந்தக் காப்பகத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மூவர் மரணமடைந்துள்ளனர் என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.   வவுனியா, பம்பைமடுப் பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தைச் சேர்ந்த…

இலங்கையில் 121 பேர் கொரோனாவுக்குப் பலி

இலங்கையில்  கொரோனாத் தொற்றால் மேலும் 121 பேர் உயிரிழந்தனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.   இதற்கமைய இலங்கையில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து…