எரிபொருள் இருப்புகளை மறைத்து வைக்கும் நிரப்பு நிலையங்கள் மீது நடவடிக்கை

எரிபொருளை மறைத்து வைத்து விற்பனை செய்யாத எரிபொருள் விற்பனை நிலையங்களைத் தேடுவதற்கு பல விசாரணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்  தெரிவித்துள்ளது. பெற்றோலிய எரிபொருளை சேமித்து வாடிக்கையாளருக்கு வழங்காத எரிபொருள் விற்பனை நிலையங்கள் தொடர்பாக எதிர்காலத்தில் கூட்டுத்தாபனம் தீர்மானம் எடுக்கும்…

இலங்கையில் புற்று நோய் மருந்துகளுக்கு தட்டுப்பாடு?

மஹரகம அபேக்ஷா புற்றுநோய் வைத்தியசாலையில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக வைத்தியசாலையில் சிகிச்சைக்காக வரும் நோயாளர்களுக்குத் தேவையான சில மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக நோயாளர்கள் தெரிவித்தனர்.   எவ்வாறாயினும், நோயாளி கள் கூறுவதைப் போல் மஹரகம…

ரூபாவின் இருப்பிலும் நெருக்கடி :உதய கம்மன்பில

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் கொள்வனவுக்கு டொலர் நெருக்கடியை எதிர்க்கொண்டுள்ள நிலைமையில் தற்போது ரூபா இருப்புக்கும் நெருக்கடி நிலைமை தோற்றம் பெற்றுள்ளது என்று வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். அத்துடன், எரிபொருளின் விலையை அதிகரிக்காவிடின் எரிபொருள் கொள்வனவுக்கான ரூபாவை திரட்டிக்கொள்வதில்…

ஈஸ்டர் தாக்குதல் வழக்கிலிருந்து பூஜித் ஜயசுந்தர, ஹேமசிறி பெர்னாண்டோ விடுதலை

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தடுக்கத் தவறியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று விடுதலை செய்துள்ளது. நீதியரசர்களான நாமல்…

இன்று முதல் தினமும் 1.45 மணித்தியால மின் வெட்டு

இன்று(17) முதல் நாளொன்றுக்கு இரண்டு முறை மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி பிற்பகல் 02.30 மணி முதல் 06.30 மணி வரை ஒரு மணித்தியாலமும், மாலை 06.30 மணி முதல் இரவு 10.00 மணி வரை…

கச்சதீவு திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்கத் தடை

கச்சதீவு அந்தோனியார் தேவாலயத் திருவிழா இம்முறையும் பக்தர்கள் பங்கேற்பின்றியே நடைபெறும் என்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ முடிவு செய்துள்ளார் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.   மயிலிட்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.…

பூஸ்டர் டோஸ் பெற்றவர்களுக்கே திருக்கேதீஸ்வரத் திருவிழாவுக்கு அனுமதி : மன்னார் சுகாதார பணிப்பாளர்

சிவராத்திரி திருநாளான எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி முழுமை யாக தடுப்பூசி பெற்றவர்கள் மட்டுமே திருக்கேதீஸ்வரம் ஆலயத் திருவிழாவுக்கு அனுமதிக்கப்படுவர் என்று மன்னார் மாவட்ட சுகாதாரப் பணிப்பாளர் மருத்துவர் ரி. வினோதன் தெரிவித்துள்ளார்.   அத்துடன் திருவிழாவில் பங்கேற்போர் 3ஆவது அல்லது…

பிரேதப் பரிசோதனைக்கு பிசிஆர் சோதனை கட்டாயம் இல்லை

மருத்துவமனை அல்லது மருத்துவமனை அல்லாத அனைத்து மரணங்களுக்கும் பிரேதப் பரிசோதனை அறிக்கையின் போது பிசிஆர் கட்டாயமில்லை என சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக நீதித்துறை மருத்துவ அதிகாரி ஆலோசகரான வைத்தியர் சன்ன பெரேரா தெரிவித்துள்ளார். அனைத்து மரணங்களுக்கும் பிரேதப் பரிசோதனை பிசிஆர் செய்வதன் விளைவாக…

வடக்கில் டெங்குப் பாதிப்பு யாழ்ப்பாணத்திலேயே அதிகம்

நாட்டில் கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 985 பேர் டெங்கு தொற் றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.   வடக்கு மாகாணத்தில் 147 பேர் டெங்கு தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில், 102 தொற்றாளர்கள்…

வல்லிபுர ஆழ்வார் தேர் திருவிழாவில் 5 பக்தர்களின் தங்கச் சங்கிலிகள் திருட்டு

யாழ். வடமராட்சி பிரதேசத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த்திருவிழாவின் போது, ஐந்து பக்தர்களின் தங்கச் சங்கிலிகள் அறுக்கப்பட்டு திருடப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. வல்லிபுர ஆழ்வாரின் வருடாந்திர மகோற்சவ தேர்த் திருவிழா நேற்று…