அமைச்சர் ஒருவரின் மின் கட்டணம் ரூ.83 லட்சம் செலுத்தப்படவில்லை

அமைச்சரவை அமைச்சர் ஒருவர் தனது வீட்டின் மின்சாரக் கட்டணமாக 83 லட்சம் ரூபாவை பல வருடங்களாக செலுத்தவில்லை என இலங்கை மின்சார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொழும்பு, சரண வீதியிலுள்ள அவரது தனிப்பட்ட வீட்டுக்காகப் பெறப்பட்ட மின்சாரத்துக்கான கட்டணங்கள் செலுத்தப்படவில்லை எனவும்…

மில்கோ நிறுவனத்துக்கு ஜனாதிபதி விஜயம்

நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள மில்கோ தொழிற்சாலையை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ இன்று (25) காலை பார்வையிட்டார். தொழிற்சாலை வளாகத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, நிறுவனத்தின் உற்பத்தி, பொதியிடல் மற்றும் விநியோகப் பிரிவுகளைப் பார்வையிட்டார். தேசிய பால் சபை 1956 இல் நிறுவப்பட்டதுடன் 1986…

கடலில் எரிவாயுக் கப்பல்கள்; தரையிறக்க டொலர் தேவை

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் ஒரு தொகை எரிவாயுவை விடுவிக்கத் தேவையான டொலர் தொகை இன்று கிடைக்காவிட்டால் நாட்டில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படக் கூடும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள 6,000 மெட்ரிக்…

டீசல் இல்லை: நுவரெலியா விவசாயிகள் சிரமத்தில் ; காய்கறி லொறிகளும் நிறுத்தம்!

எரிபொருள் நெருக்கடி காரணமாக நுவரெலியாவில் மரக்கறி போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக அகில இலங்கை கூட்டு விசேட பொருளாதார மத்திய நிலையங்களின் சங்கத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். அருண சாந்த ஹெட்டியாராச்சி இன்று  நுவரெலியாவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.அவர் மேலும் உரையாற்றுகையில்,…

இலங்கைப் பொறியியலாளரால் மின்சார சைக்கிள் அறிமுகம்

இலங்கையின் இளம் பொறியியலாளர் ஒருவர் மின்சார சைக்கிளை வடிவமைத்துள்ளார். இந்தச் சைக்கிள்கள் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு விட்டதாக அவர் கூறுகிறார். ஒருமுறை சார்ஜ் செய்தால் 60 கிலோமீற்றர் பயணிக்க முடியும் என்றும், ஒரு முறை சார்ஜ் செய்ய 10 ரூபா மட்டுமே…

மசகு எண்ணெய் ஒரு பீப்பாய் 100 டொலரைக் கடந்தது

கடந்த 2014ஆம் ஆண்டுக்குப் பின் முதல் முறையாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 100 டொலரைத் தாண்டியுள்ளது. அதன்படி இன்று (24) பிரென்ட் மசகு எண்ணெய் குறியீட்டின் படி மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 101.5…

யாழ். எரிபொருள் நிரப்பு  நிலையம் ஒன்றில் ‘டீசல் இல்லை’ பதாகை

யாழ்ப்பாணத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில்  ‘டீசல் இல்லை’  என்ற பதாகை வைக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதி மருதனார்மடம் சந்தியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இவ்வாறான பதாகை வைக்கப்பட்டுள்ளது. அத்தோடு குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அதிகமான மக்கள்…

மணல் மோசடியில் பிரதமரின் செயலாளர்; சிஐடி விசாரணை

கந்தளாய்ப் பகுதியில் மணல் கடத்தல் நடவடிக்கையை மேற்கொண்டதாகக் கூறப்படும் பிரதமரின் ஒருங்கிணைப்பு செயலாளர் குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சம்பந்தப்பட்ட ஒருங்கிணைப்புச் செயலாளர் புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தில் உயர் பதவியில் இருந்த போதே மணல்…

இலங்கையில் டீசல் விலை டுபாயை விட இன்னும் சிறப்பாக உள்ளது: பந்துல

எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடாக விளங்கும் டுபாய் இன்னும் இலங்கையின் டீசல் விலையுடன் போட்டியிட முடியாது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நேற்று (22) ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இலங்கையில் டீசலின் தற்போதைய…

கடும் நெருக்கடியில் லிட்ரோ எரிவாயு நிறுவனம்

நாட்டின் முன்னணி எரிவாயு விநியோக நிறுவனமான லிட்ரோ நிறுவனம் தற்போது எரிவாயுவை இறக்குமதி செய்ய முடியாத கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மார்ச் மாதத்துக்கான அத்தியாவசிய எரிவாயுக் கையிருப்பு எதுவும் விண்ணப்பம் செய்யப்படாததன் காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளது. வழக்கமாக ஒரு மாதத்துக்கான…