ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராஜிகா விக்கிரமசிங்க கொவிட் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். கொவிட் பரிசோதனையில் சில சிறிய அறிகுறிகளுக்குப் பிறகு அவருக்கு வைரஸ் தொற்றிருப்பது தெரிய வந்தது.பாதிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் தற்போது அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும், அவருக்கு…
Category: SRI LANKA 1
புலிகளுக்கு நிதி சேகரித்ததாக கைதாகிய நபர் 12 வருடங்களின் பின்னர் விடுதலை
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்து வழங்கிய குற்றச்சாட்டில் கைதான அரசியல் கைதியொருவர் 12 ஆண்டுகளின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் – விக்கினேஸ்வரா கல்லூரி வீதி, கரவெட்டியைச் சேர்ந்த கந்தப்பு ராஜசேகர் என்பவரே கொழும்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி சந்திமல் லியனகேயினால்…
குருநாகலில் குளத்தில் நீராடிய இரு மாணவிகள் மூழ்கிப் பலி
குருநாகல் வில்பாவ குளத்தில் நீராடச் சென்ற பாடசாலை மாணவிகள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். நேற்று (15) மாலை வில்பாவ குளத்தில் நான்கு சிறுமிகள் குளிப்பதற்குச் சென்றுள்ளனர். நால்வரும் நீரில் மூழ்கியதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். பின்னர் அவர்களை பிரதேசவாசிகள் மீட்டதுடன்,…
காசல்ரீ, மவுசாக்கலை நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் மேலும் வீழ்ச்சி
இந்த நாட்களில் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக நீர் மட்டம் மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக நீர் மின் உற்பத்திக்கு நீர் வழங்கும் காசல்ரீ மற்றும் மவுசாக்கலை நீர்த்தேக்கங்களுக்கு பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்தனர். இரண்டு மின் உற்பத்தி நிலையங்களும்…
வெளிநாடு செல்வோருக்கான பிசிஆர் பரிசோதனை யாழில் மீள ஆரம்பம்
வெளிநாடு செல்வோருக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று முதல் மீளவும் நடைபெறவுள்ளன. நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வந்த சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக வெளிநாடு செல்வோருக்கான பி.சி. ஆர். பரிசோதனைகளை வைத்தியசாலையில் மேற்கொள்வதில் சிக்கல் நிலை காணப்பட்டது.…
இந்தியாவிலிருந்து டீசல் ஏற்றிய கப்பல் இலங்கை வந்தடைந்தது
40,000 மெட்ரிக் தொன் டீசல் ஏற்றிய கப்பலை இந்தியா இலங்கைக்கு அனுப்பியுள்ளது. கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரால் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிடம் டீசல் தொகுதி கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் துறைமுக அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவும் கலந்து கொண்டார்.————–Reported by : Sisil.L
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 2000 ரூபா நிவாரணப் பொதி
இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் குறைந்த வருமானம் பெறுவோருக்கு உத்தேச வீட்டுப் பொருளாதாரப் பாதுகாப்பு (நிவாரணப் பொதி) திட்டத்தின் கீழ் 2000 ரூபா பெறுமதியான நிவாரணப் பொதியை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன்படி, ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவிலும் தெரிவு…
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் இராஜிநாமா
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் பதவியிலிருந்து ஜயம்பதி ஹீன்கெந்த இராஜினாமா செய்துள்ளதாகத் தெரிய வருகிறது. ஊடகங்கள் மற்றும் தகவல் அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட்ட விடுத்த அறிவித்தலை அடுத்து பதவி விலகியுள்ளார். வெற்றிடத்தை நிரப்புவதற்கு நிர்வாக சேவையில் மூத்த அதிகாரி…
சுகாதார ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு இடைநிறுத்தம்
சுகாதார நிபுணர்களின் வேலைநிறுத்தம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார நிபுணர்கள் சம்மேளனத்தின் அழைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார். நாளை காலை 8 மணி முதல் 14 நாட்களுக்கு தமது வேலைநிறுத்தம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். பதினெட்டு சுகாதார தொழிற்சங்கங்கள் ஒன்பது நாட்களாக வேலை…
எரிபொருளைக் கொண்டு வர டொலர் இல்லை;டொலர் வாங்க ரூபா இல்லை : சிபெட்கோ
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் டொலர்களைப் பெறுவதற்கு ரூபா கிடைக்காததால் கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. டொலர் பற்றாக்குறையால் எதிர்காலத்தில் நாட்டுக்குத் தேவையான எரிபொருளை இறக்குமதி செய்வதில் கூட்டுத்தாபனம் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதனைக் கருத்திற்கொண்டு நிவாரணம் வழங்குமாறு அல்லது எரிபொருளுக்கு விதிக்கப்பட்டுள்ள விலையை…

