பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4000 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மீட்பு

அங்குனகொலபெலசவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4000 சமையல் எரிவாயு சிலிண்டர்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். எரிவாயு சிலிண்டாகளை சேமிப்பதற்கான ரனா என்ற பகுதியில் இவற்றை பதுக்கி வைத்திருந்தனர் எனவும் இரண்டு லொறிகள் இரண்டு கொள்கலன்களில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் காணப்பட்டன எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

1 பில்லியன் டொலர் கடன் உதவி : நிதியமைச்சர் இந்தியா பயணமானார்

இலங்கை சந்தித்து வரும் பொருளாதாரச் சரிவுக்கு மத்தியில், இந்தியாவிடம் கடன் உதவி பெற கையெழுத்திடுவதற்காக அந்நாட்டின் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று புதுடெல்லிக்கு விஜயம் செய்தார். இரண்டு நாள் பயணமாக இந்தியா செல்லும் பசில் ராஜபக்ஷ மத்திய அரசுடன் முக்கியமான…

எரிபொருள் விலையேற்றத்தினால் மீனவர்களும் கடுமையாக பாதிப்பு

எரிபொருள் விலையேற்றத்தினால் தாங்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் விலை அதிகரிப்பினால் மீனவர்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்படுவதனால் தமக்கு பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக மாத்தறை மாவட்ட கடற்றொழிலாளர் சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார். தற்போதைய பொருளாதார நெருக்கடி…

கனடாவில் வீதி விபத்தில் பலியான மாணவர்; தனது கிராமத்திலிருந்து வெளிநாட்டுக்கு கற்கச் சென்ற முதல் மாணவர்

கனடாவில் வீதி விபத்தொன்றில் இந்திய இளைஞர்கள் ஐவர் பலியானார்கள். அவர்களில், பவன் குமார் (23) என்பரும் ஒருவர். பவன் குமார் ஹரியானாவிலுள்ள Lilas என்னும் சிறு கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார். அந்தக் கிராமத்தின் மொத்த மக்கள் தொகையே 2,600தான். இரண்டு ஆண்டுகளுக்கு…

அரசாங்கத்துக்கு எதிராக இன்று கண்டனப் பேரணி

நாட்டில் விலைவாசி உயர்வைக் கண்டித்து ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான  எதிர்க்கட்சிகள் ஏற்பாடு செய்துள்ள அரசாங்கத்திற்கு எதிரான கண்டனப்   பேரணி இன்று(15) பிற்பகல் கொழும்பில் நடைபெற்றது. இதன்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.   Reported…

இலங்கையில் ஒரு டொலர் 275 ரூபா!

ஒரு அமெரிக்க டொலரின் விற்பனை விலை நாட்டில் அனுமதி  பெற்ற வர்த்தக வங்கிகள் சிலவற்றில் இன்று (15) 275 ரூபாவாக விற்பனையாகின. அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாவின் மதிப்பு மிதக்க அனுமதிக்கப்பட்டுள்ளதால், டொலரின் பெறுமதி தினமும் ஏற்ற இறக்கமாக உள்ளது.அதன்படி இன்று…

ஷொப்பிங் பை – லஞ்ச் சீற் விலை அதிகரிப்பு

மூலப்பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாகவே ஷொப்பிங் பைகள்  மற்றும் லஞ்ச் சீற்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பொலித்தீன் உற்பத்தியாளர்கள் மற்றும் மறு சுழற்சியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஒரு ரூபாவுக்கு விற்கப்பட்ட ஷொப்பிங் பையின் மொத்த விலை…

மருந்துகளுக்கு தட்டுப்பாடில்லை: அமைச்சர் சன்ன ஜயசுமண

நாட்டில் தற்போது மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை என மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார். இரத்மலானை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.…

புதிய பஸ் கட்டணத் திருத்தம் வெளியானது

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் திருத்தியமைக்கப்பட்ட பஸ் கட்டண விபரங்களை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதற்கமைய ஆரம்பக் கட்டணமான 17 ரூபா கட்டணம் 20 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன், ஏனைய கட்டணங்கள் 15…

புலமைப்பரிசில் பரீட்சை: யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவனுக்கு  198 புள்ளிகள்

2021ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் தமிழ்ச்செல்வன் கஜலக்ஷன் 198 புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார். புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்றிரவு வெளியாகின.   இதில், கிடைக்கப்பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் கொக்குவில் இந்துக்…