தங்கம் விலை மேலும் அதிகரிப்பு; 22 கரட் தங்கம் ரூ. 150,000 ஐ தாண்டியது

இலங்கை தங்கச் சந்தையில் 22 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை இன்று (18) பிற்பகல் வரை 150,000 ரூபாவாக அதிகரித்திருந்தது. கொழும்பு செட்டியார் தெருவிலுள்ள தங்க உற்பத்தியாளர்கள், ஆபரண தயாரிப்புக்கான தங்கத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.தங்கம் இறக்குமதியில் டொலர் இல்லாதது…

இன்று நாடளாவிய ரீதியில் எரிவாயு விநியோகம் – லிட்ரோ

இன்று நாடளாவிய ரீதியில் எரிவாயு விநியோகத்தை மேற்கொண்டு வருவதாக லிட்ரோ தெரிவித்துள்ளது. ஒரு நாளைக்கு சுமார் 120,000 உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.அதன்படி அடுத்த சில நாட்களில் எரிவாயு தட்டுப்பாடு படிப்படியாக நீங்கும் எனத் தெரியவருகிறது. கொழும்புத்…

அரசுக்கு எதிராக ஐ.தே.க. எதிர்வரும் 25இல் சத்தியாக்கிரகப் போராட்டம்

ஐக்கிய தேசியக் கட்சியின் சத்தியாக்கிரகப் போராட்டம் எதிர்வரும் 25ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது. பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்தும், மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தியுமே குறித்த சத்தியாக்கிரகப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ள இந்தப் போராட்டத்தில் ஐ.தே.கவுக்கு…

சீமெந்து விலையேற்றத்தால் கட்டிடத்தொழிலாளர்கள் வேலை இழப்பு

சீமெந்து உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வால் கட்டுமானத் துறையும் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.சீமெந்தின் விலையும் ஏனைய பொருட்களின் விலைகளும் நாளாந்தம் அதிகரித்து வருவதனால், தற்போது நாடு இந்தத் துறையில் பாரிய வீழ்ச்சியை எதிர்நோக்கி வருவதாக அகில இலங்கை கட்டிடத்தொழிலாளர்கள்…

கொரோனாவை கட்டுப்படுத்தும் தொப்பி – இலங்கை விஷேட மருத்துவரின் கண்டுபிடிப்பு

கொவிட் 19 வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த வைரஸைக் கொல்லக்கூடிய தொப்பியை அறிமுகப்படுத்த முடிந்ததாக விஷேட மருத்துவ நிபுணர் மருத்துவர் சனத் ஹெட்டிகே கூறுகிறார். இரசாயனத்தை எதிர்க்கும் தொப்பியைப் பயன்படுத்துவதால், வைரஸ் சுவாசக் குழாயில் நுழைந்து, தலை, கழுத்து மற்றும் நெற்றியில் தொற்று…

தேர்தலின்றி ஜனாதிபதியாக பதவியேற்க பசில் திட்டம் : விமல் வீரவன்ச

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலின்றி ஜனாதிபதியாக வருவதற்கு பசில் ராஜபக்ஷவும் அவரது ஆதரவாளர்களும் திட்டமிட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். ‘ஹிரு’ சேனலுடனான நிகழ்ச்சி ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தற்போதைய நெருக்கடி நிலை தீவிரமடையும்…

ரூபவாஹினி கூட்டுத்தாபனம் திறைசேரியிடம் நிதி வழங்குமாறு கோரிக்கை

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் சம்பளம் மற்றும் ஏனைய அத்தியாவசிய செலவுகளை மேற்கொள்வதற்காக 240 மில்லியன் ரூபாவை வழங்குமாறு திறைசேரியிடம் கோரப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் முதல் எதிர்வரும் ஜூலை மாதம் வரையிலான செலவுகளை ஈடுகட்ட பணம் கோரப்பட்டுள்ளது. மேலும் கூட்டுத்தாபனத்தின் வருமானம்…

கொழும்பு 13 ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய வருடாந்தத் தேர்த்திருவிழா

கொழும்பு 13 ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய வருடாந்தத் தேர்த்திருவிழா இன்று காலை மிகவும் பக்திபூர்வமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பெருமளவு பக்தர்கள் பங்கேற்றிருந்தனர். Reported by : Sisil.L

டொலர் இல்லை: 4 நாட்களாக காத்திருக்கும் எண்ணெய்க் கப்பல்

டீசல் மற்றும் விமான எரிபொருளை ஏற்றி வந்த கப்பல் ஒன்று அவற்றை விடுவிக்க முடியாமல் நான்கு நாட்களாக இலங்கை கடற்பரப்பில் தரித்து நிற்கிறது. இரண்டு எரிபொருட்களும் 20,000 மெட்ரிக் தொன் கொண்டதாக கப்பலில் உள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட அதிகாரி…

தைத்த ஆடைகளின் விலைகள் அதிகரிக்கும் சாத்தியம்

மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு காரண மாக அனைத்து ஆடைகளின் விலைகளும் 30-31% வரை அதிகரிக்க வேண்டியுள்ளதாக அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மூலப்பொருட்களுக்கான 40 அடி கொள்கலனுக்கு கப்பல் நிறுவனங்கள் இதுவரை 200,000 ரூபாவை…