போர் முடிவுக்கு வந்து 10 வருடங்கள் – எதற்கு பயங்கரவாத தடைச் சட்டம்? : லக்ஷ்மன் கிரியெல்ல

நாட்டில் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு 10 வருடங்கள் நிறைவடைந்த நிலையில், இன்னமும் பயங்கரவாத தடைச் சட்டம் எதற்கு என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல கேள்வி எழுப்பியுள்ளார். என்னைக் கைது செய்தாலும் விசாரணை இல்லாமல் ஒரு வருடம் சும்மா…

யாழ். போதனா வைத்தியசாலையில் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு; கண் சத்திர சிகிச்சைகள் இடைநிறுத்தம்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அதன் பதில் பணிப்பாளர் வைத்தியர் மு.நந்தகுமார் தெரிவித்துள்ளார்.மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். கண் சத்திர சிகிச்சைக்கான மருந்துப் பொருட்கள் சிலவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது.…

திருமண பதிவுச் சட்டத்தில் திருத்தம்; அமைச்சரவை அங்கீகாரம்

வெளிநாட்டு விவாகரத்துகளைப் பதிவு செய்தல், திருமணத்தை இரத்து செய்தல் அல்லது சட்டத்துறை பிரிவினையை அங்கீகரிப்பது தொடர்பான புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கான  சட்டமூலங்களை வரைஞர்கள் தற்போது தயாரித்து வருவதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமணத்தை பதிவு செய்வதற்கு…

எதிர்காலத்தில் எரிபொருளின்  விலை குறைக்கப்படும்- சாகர காரியவசம்

எதிர்காலத்தில் நாட்டில் எரிபொருட்களின் விலை குறைவடையும் எனவும், அதற்கமைவாக எரிபொருள் கையிருப்பு வைத்துள்ள மக்கள் பாரிய நட்டத்தை அனுபவிக்க நேரிடும் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும்  நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் எரிபொருளை வெளியிட்டு…

ஜனாதிபதி பதவி விலக மாட்டார்: ஜனாதிபதியின்  பேச்சாளர்

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ பதவி விலகுவது தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகளை ஜனாதிபதியின் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க மறுத்துள்ளார். ஜனாதிபதி பாரதூரமான நெருக்கடியில் தப்பி ஓடியவர் அல்ல எனவும், இன்று நாடு எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் ஜனாதிபதி…

உலக மகிழ்ச்சி சுட்டெண்ணில் 146 நாடுகளில் இலங்கைக்கு 127ஆவது இடம்

ஐக்கிய நாடுகளின் நிலையான அபிவிருத்தித் தீர்வுகள் வலையமைப்பின் அனுசரணையில் உருவாக்கப்பட்ட ‘மகிழ்ச்சி சுட்டெண்’ இல் இவ்வாண்டு இலங்கைக்கு 127ஆவது இடம் கிடைத்துள்ளது. 2021ஆம் ஆண்டில் இலங்கை 129ஆவது இடத்தைப் பெற்றிருந்தது.   இதன்படி, 2022 மகிழ்ச்சி சுட்டெண்ணில் இலங்கை இரண்டு இடங்கள்…

கொழும்பு நகரில் அதிகரிக்கும்  யாசகர்கள்!

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் வகையில் கடந்த இரண்டு மாதங்களில் கொழும்பு வீதிகளில் யாசகம் பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. யாசகர்களில் பலர் வெளிப் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட் டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.குறிப்பாக குடும்பங்கள் யாசகம் பெறும் நிலை கொழும்பு…

யாழில் மத ஸ்தலங்களுக்குச் சென்று வழிபாடுகளை மேற்கொண்ட பிரதமர்

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று(19) மத ஸ்தலங்களுக்குச் சென்று வழிபாடுகளை மேற்கொண்டார். நயினாதீவு நாக விகாரை மற்றும் நயினை நாகபூசணி அம்மன் ஆலயம், ஆரியகுளம் நாக விகாரைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். பிரதமரின் வருகையையொட்டி யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு…

பால்மாவின் விலையை மீண்டும் அதிகரிக்கத் தீர்மானம்

உலகச் சந்தையில் பால் மாவின் விலை அதிகரிப்பு மற்றும் டொலரின் பெறுமதி அதிகரிப்பு காரணமாக இலங்கையில் பால் மாவின் விலையை அதிகரிக்க வேண்டியுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன்படி ஒரு கிலோ பால் மா பைக்கற் 600 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு…

ரூபாவை மிதக்க வைத்த விதம் தவறு : மத்திய வங்கி முன்னாள் பிரதி ஆளுநர்

இலங்கை மத்திய வங்கி ரூபாவை மிதக்க வைக்கும் முறை தவறானது என இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் கலாநிதி டபிள்யூ.ஏ. விஜேவர்தன கூறியுள்ளார். வீதியில் பிரேக் போடாத வாகனம் போல ரூபா இப்போது மிதந்து விட்டது என்கிறார். மத்திய…