சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேணை தோற்கடிக்கப்பட்டுள்ளது.

நம்பிக்கையில்லா பிரேணை மீதான வாக்கெடுப்பு இன்று (08)  மாலை பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. 

நம்பிக்கையில்லா பிரேணைக்கு ஆதரவாக  73 வாக்குகளும், எதிராக 113 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

நம்பிக்கையில்லா பிரேணை மீதான விவாதம் நேற்று முன்தினம் ஆரம்பமானது.

இந்த விவாதத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்று, தமது கருத்துகளை முன்வைத்திருந்தனர்.

ஐக்கிய மக்கள் சக்தியினரால் இந்த நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்பட்டது. 

பொறுப்பற்ற முறையில் தரமற்ற மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்களை நாட்டுக்கு கொண்டுவந்து, சுகாதாரத்துறையை பலவீனப்படுத்தி, அதன் ஊடாக உயிரிழப்புகள் பதிவானமை உள்ளிட்ட காரணங்களை உள்ளடக்கி இந்த  நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டது.

Reported by :S.Kumara

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *