சிறையில் வாடும் நூற்றுக்கணக்கான தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி ஜனாதிபதியிடம் ஒரு மனுவை சமர்ப்பிக்க வேண்டியவர்கள் கொலைக்குற்றவாளி துமிந்தசில்வாவை

மேல் மாகாணம் முழுவதும் நாளை(29.10.2020) நள்ளிரவு முதல் திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுமென என இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா சற்றுமுன் தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தின் பல பகுதிகளில் அதிகளவு கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதை அடுத்தே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் திங்கட்கிழமை காலை வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மேல் மாகாணத்தில் ஏற்கனவே அமுல்படுத்தப்பட்டிருக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அந்த பிரதேசங்களில் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என இராணுவ தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் கொழும்பு நகரின் தற்போதைய நிலை தொடர்பில் செய்திளார்கள் இராணுவதளபதி சவேந்திர சில்வாவிடம் வினவிய போது தெற்கு பதிலளித்த அவர்,

“கொழும்பில் குறிப்பிடத்தக்களவு அபாயநிலை உள்ளமை வெளிப்படையானது. ஆனால் அதுகுறித்து உறுதியாக எதனையும் கூற முடியாதுள்ளது. கொழும்பின் சில பகுதிகளில் 7 நாட்கள் வரையில் ஊரடங்குச் சட்டம் அமுலாக்கப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *