கல்வியை அரசியல் காற்பந்தாக மாற்ற இடமளிக்க கூடாது

கல்வியை அரசியல் காற்பந்தாக மாற்றிக்கொள்ளும் பட்சத்தில் நாடு தோல்வியை சந்திக்க நேரிடும் என்பதால், தனிப்பட்ட நோக்கங்களை விடுத்து, அனைவரும் ஒன்றிணைந்து கலந்துரையாடி நாட்டிற்கு பொருத்தமான கல்வி முறையொன்றை அறிமுகப்படுத்த வேண்டியது அவசியமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கொழும்பு நெலும் பொக்குன கலையரங்கத்தில் இன்று (23) நடைபெற்ற அகில இலங்கை தொழில்சார் வளவாளர்கள் சங்கத்தின் 10 ஆவது வருடாந்த மாநாட்டிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அகில இலங்கை தொழில்சார் வளவாளர்கள் சங்கமானது (APLA), இலங்கை முழுவதும் வியாபித்திருக்கின்ற பிரத்தியேக வகுப்புகளின் ஆசியர்கள் ஒன்றிணைந்து, 2004 ஆம் ஆண்டில் உருவாக்கிய அமைப்பாகும்.

அகில இலங்கை தொழில்சார் வளவாளர்கள் சங்கத்தின் ஆரம்ப அங்கத்தவர்களில் ஒருவரும், சிரேஷ்ட கலாநிதியுமான கே.ஆரியசிங்கவிற்கு சிரேஷ்ட வளவாளருக்கான விருதும் ஏனைய வளவாளர்களுக்கான விருதுகளும் இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வழங்கி வைக்கப்பட்டதோடு, நிகழ்வின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டிருந்த ஜனாதிபதிக்கு வளவாளர்கள் சங்கத்தின் தலைவர் ரவீந்திர பண்டாரவினால் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

பின்னர் ஜனாதிபதி அகில இலங்கை தொழில்சார் வளவாளர்கள் சங்க நிறைவேற்றுக் குழு உறுபினர்களுடன் குழு புகைப்படம் எடுக்கும் நிகழ்விலும் இணைந்துகொண்டார்.

Reported by: S.Kumara

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *