இலங்கையில் மேலும் 293 பேருக்கு கொரோணா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. முன்னைய நோயாளர்கள் உடன் நெருங்கிப் பழகிய 291 பேருக்கும் மற்றும் தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 2 பேருக்கும் இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து நட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 8,706 ஆக உயர்வடைந்துள்ளதுடன் 4,646 தொற்றாளர்கள் தற்போது நாடு முழுவதும் உள்ள 27 கொரோனா தொற்றுக்கான வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்துடன் இன்று நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,043ஆக அதிகரித்துள்ளது.இதேவேளை, கொரோனா சந்தேகத்தில் 445பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் கொரோனா தொற்று காரணமாக 19 பேர் உயிரிழந்தும் உள்ளனர். இவர்களுள் 03 பேர் இன்று மட்டுமே மரணமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.
சுகாதார மேம்பாட்டுப் பணியகம் நாட்டில் இன்றுவரை 460455 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.