வவுனியாவில் குடும்ப விபரம் திரட்டும் பணியில் பொலிஸார்

வவுனியா பூந்தோட்டம் பகுதிகளில் வசித்துரும் பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்ற பொலிஸார் அங்கு தங்கியுள்ள குடும்ப உறுப்பினர்களின் விபரங்களைத் திரட்டும் படிவம் ஒன்றை வழங்கி விட்டுச் சென்றதுடன் இரு தினங்களில் அவற்றை

பெற்றுக்கொள்வதற்கு வருகை தருவதாகவும் குடும்ப விபரங்களில் உள்ளடக்கப்பட்ட விபரங்களை வழங்குமாறும் கூறியுள்ளனர் .

எவ்விதமாக தெளிவுபடுத்தும் அறிவுறுத்தல்கள் மற்றும் காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்படாமல் இவ்வாறு

குடும்ப விபரங்களைக் கோருவதால் பொதுமக்கள் மத்தியில் ஓர் அச்ச நிலை அப்பகுதியில் தோன்றியுள்ளதாக மக்கள்

தெரிவிக்கின்றனர்.இவ்விடயம் குறித்து மேலும் தெரிய

வருகையில்-நேற்று முன்தினம் முதல் பூந்தோட்டம் பகுதியில் வசிக்கும் மக்களிடம் சென்ற பொலிஸார் வீடுகளில் வசிப்ப வர்களின் பெயர், முகவரி, தொழில், தேசிய அடையாள அட்டையின் இலக்கம், தொலைபேசி இலக்கம் போன்ற

முக்கிய தகவல்களைக் கோரிய விண்ணப்பப்படிவம் ஒன்றை வழங்கி வருவதுடன் அவ்விவரங்களைச் சேகரிப்பதற்கு மீண்

டும் வருகை தரவுள்ளதாகவும், அப்படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை நிரப்பிக் கையளிக்குமாறு அறிவுறுத்தல்

களை வழங்கிவிட்டுச் சென்றுள்ளனர் .

இவ்வாறு பொலிஸாரினால் குடும்ப விபரங்கள் சேகரிப்பதற்கு காரணங்கள் தெரியாமல் மக்கள் மத்தியில்  அச்ச நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *