யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடம், யாழ்.போதனா வைத்தியசாலையின் ஆய்வுகூடங்களில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் தொற்றாளர்கள் 132 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று முன் தினம் இரவு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 03 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
யாழ்.பல்கலைக்கழகத்தின் ஆய்வு கூடத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த 73 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.இதேவேளை, யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று பகல் நடைபெற்ற பி.சி.ஆர் பரிசோதனையில் 56 தொற்றாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
யாழ்.போதனா வைத்தியசாலையின் அடிப்படையில்,வவுனியா மாவட்டத்தில் வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 17 பேர்,வவுனியா தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 பேர்,யாழ்.மாவட்டத்தில் யாழ்.போதனா வைத்தியசாலையில் 04 பேர்,பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 03 பேர், சங்கானை பிரதேச வைத்தியசாலையில் ஒருவர் முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 20 பேர்,முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் 03 பேர்,கிளிநொச்சி மாவட்டத்தில் பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 பேர்,கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் 03 பேர்,மன்னார் மாவட்டத்தில்
மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
யாழ்.போதனாவில் கடந்த இரவு பரிசோதனையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் இருவர்,தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் ஒருவர் என தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
———————
Reported by : Sisil.L