யாழ்ப்பாணம் நகரைச் சேர்ந்த மேலும் 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் இன்று தெரிவித்தார்.
திங்கட்கிழமை யாழ்.நகர் நவீன சந்தைத் தொகுதி வர்த்தகர்களிடம் இருந்து பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையிலேயே குறித்த முடிவுகள் வெளியாகியுள்ளன.
464 பேருக்கு முல்லேரியாவில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையிலேயே மேற்படி முடிவுகள் வெளியாகியுள்ளன.
Reported by : Sisil.L