யாழ்ப்பாணம் உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட இணுவில் கிராமத்தின் ஜே/190 கிராமசேவகர் பகுதியை முடக்குவதற்கு சுகாதாரப் பிரிவு தீர்மானித்துள்ளது.இந்தப் பகுதியில் அதிக தொற்றாளர்கள் இனங் காணப்பட்டமையைத் தொடர்ந்தே இப் பகுதியை முடக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சுகாதாரப் பகுதியினர் யாழ். மாவட்ட கொரோனா ஒழிப்பு செயலணிக்கு அறிவித்துள்ளனர். செயலணியின் அனுமதி கிடைத்ததும் இணுவிலின் ஜே / 190 கிராம சேவகர் பகுதி முழுமையாக முடக்கப்படும் என்று தெரிய வருகின்றது.
இதேவேளை யாழ். மாவட்டத்தில் மூன்று கிராம சேவகர் பகுதிகள் முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
——————-
Reported by : Sisil.L