யாழ்ப்பாணத்தில் ஆசிரியை, தாதி, கைதி உட்பட ஆறு பேர்நேற்று கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்
பட்டனர்.யாழ். போதனா வைத்தியசாலையின் ஆய்வுகூடத்தில் நேற்று நடத்தப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையிலேயே இவர்கள் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.
தொற்றுக்குள்ளானவர்களில் மூவர் யாழ். மாநகர சபை எல்லைக்கு உட்பட்டவர்கள்.இவர்களில் ஒருவர் சிறைக் கைதி ஆவார். மற்றையவர் மல்லாவியில் நடந்த மரணச் சடங்குக்குச் சென்றுதிரும்பியவர்.இன்னொருவர் கொழும்பிலிருந்து
யாழ்ப்பாணம் வந்த நிலையில் தனிமைப்படுத்தலில் இருந்த பெண் ஆவார்.
இதேபோன்று, சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஆசிரியை ஒருவர் தொற்றாளராக இனங்காணப்பட்டவர். இவர் ஏற்கனவே தொற்றாளராக இனங்காணப்பட்ட ஆசிரியையுடன் தொடர்புபட்டவராவார்.
ஏனைய இருவரில் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் தாதியா
கப் பணியாற்றுபவர். இவர் முன்னர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்
பட்ட தாதியர்களுடன் இணைந்து பணியாற்றியவர். மற்றையவர் அந்த வைத்திய
சாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட79 வயது மூதாட்டி ஆவார்.
Reported by : Sisil.L