யாழில் நேற்று 39 பேருக்கு தொற்று-6 கடைகளுக்குப் பூட்டு

யாழ். மாவட்டத்தில் 39 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 45 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த  417 பேரின் மாதிரிகள் யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று பரி
சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் யாழ். மாவட்டத்தில் ஐவர், மன்னாரில் இருவர், வவுனியாவில் ஒருவர் என 8 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர். அத்துடன், கிளிநொச்சி தனிமைப்படுத்தல் முகாமைச் சேர்ந்த 3 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதேவேளை, யாழ். மாநகரப் பகுதியில் வர்த்தகர்கள், பணியாளர்கள் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்புடை யவர்கள் என 431 பேரின் மாதிரிகள் முல்லேரியா ஆய்வுகூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. இவர்களின் பரிசோதனை முடிவுகளை நேற்று மாலை வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் நேற்று வெளியிட்டார்.


இதன்படி, வர்த்தகர்கள், பணியாளர்கள் 22 பேருக்கும், அவர்களுடன் தொடர்புடைய 12 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், யாழ்.மாவட்டத்தில் நேற்று 39 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதேசமயம், தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 6 வர்த்தக நிலையங்களை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கும் மாகாண சுகாதாரப் பணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *