யாழ்ப்பாணத்தில் மேலும் 25 பேருக்கும் மன்னாரில் இருவருக்கும் வவுனியாவில் ஒருவருக்கும் கொரோனா வைரஸ்
தொற்று நேற்றுப் புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
இவர்களில் 17 பேர் யாழ்ப்பாணம் மாநகர சந்தை மற்றும் கடைத் தொகுதியைச் சேர்ந்தவர்கள் என்று அவர் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வு கூடம் என
இரண்டிலும் 607 பேரின் மாதிரிகள் நேற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இதன்போதே 28 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நோயாளர் விடுதியில் நால்வருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த 9 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இவர்களில் 5 பேர்
யாழ்ப்பாணம் மாநகர சந்தை மற்றும் கடைத் தொகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
ஏனைய நால்வரும் ஏற்கனவே சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள்.
சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இவர் ஏற்கனவே
சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்.
சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த இருவருக்கு தொற்று கண்டறிப்பட்டது. இவர்கள்
இருவரும் யாழ்ப்பாணம் மாநகர கடைத்தொகுதியைச் சேர்ந்தவர்கள்.
தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த இருவர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட
னர். இவர்கள் இருவரும் சுயதனிமைப்படுத்தலில் கண்காணிக்கப்பட்டவர்கள் நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி
பிரிவைச் சேர்ந்த ஆறு பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இவர்கள் நால்வரும் யாழ்ப்பாணம் மாநகர வர்த்தக நிலையங்களைச் சேர்ந்தவர்கள்.
தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
மன்னார் வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சேர்க்கப்பட்ட இருவருக்கு தொற்று கண்டறியப்பட்டது.
மேலும், வவுனியா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இதேவேளை, யாழ்ப்பாணம் மாநகரில் சந்தை மற்றும் கடைத் தொகுதிகளைச் சேர்ந்தோரின் மாதிரிகள் சிறிஜெயவர்த்தனபுர ஆய்வுகூடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டன. இவற்றின் பி.சி.ஆர். பரிசோதனை அறிக்கைக்காக காத்திருப்பதாகவும் கேதீஸ்வரன் தெரிவித்தார்.
Reported by : Sisil.L