மிருசுவில் பகுதியில் மக்கள் காணியை இராணுவம் அபகரிக்கும் முயற்சி ;மக்கள் எதிர்ப்பு போராட்டம்

யாழ். தென்மராட்சி எழுதுமட்டுவாள் வடக்கு(ஜே.34) கிராம சேவகர் பிரிவில் மிருசுவில் ஆசைப்பிள்ளை ஏற்றப் பகுதியில் பொதுமக்களுக்குச் சொந்தமான 40 ஏக்கர் காணியை இராணுவத்தின் 52ஆவது படையணியின் பயிற்சி முகாம் அமைப்பதற்காக நில அளவை செய்து அபகரிக்கும் முயற்சி இன்று காலை  முன்னெடுக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சுவீகரிப்பு முயற்சியை அறிந்த காணி உரிமையாளர்கள் அரசியல்வாதிகள் சமூக ஆர்வலர்கள் காலை 9.00 மணி முதல் எதிர்ப்பை வெளியிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அறியவருகிறது.

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *