இலங்கை போக்குவரத்து சபை மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவைகளை இடைநிறுத்தியுள்ளது.
இதன்படி நேற்று நள்ளிரவு முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன என்று இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நேற்று நள்ளிரவு முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் ஜனாதிபதிகோத்தபாய ராஜபக்சவின் உத்தரவுக்கமைய விதிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கை போக்குவரத்து சபை மேற்படிதீர்மானத்தை எடுத்துள்ளது.
—————————-
Reported by : Sisil.L