மன்னார் மாவட்டத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை கால நிலை மாற்றத்தினால் ஏற்பட்ட கடும் காற்றின் காரணமாக 16 குடும்பங்களைச் சேர்ந்த 59 பேர் பாதிப்படைந்துள்ளதாக மன்னார் மாவட்ட அனார்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் கணகரட்னம் திலீபன் தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது;
“செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட கடும் காற்று காரணமாக மன்னார் மாவட்டத்தில் 16 குடும்பங்களைச் சேர்ந்த 59 நபர்கள் பாதிப்படைந்துள்ளனர். மேலும் மாவட்டத்தில் 13 வீடுகள் பௌதீக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதோடு 2 சிறிய கடைகளும் சேதமடைந்துள்ளன.
மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் 5 வீடுகளும் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் 5 வீடுகளும் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் 2 வீடுகளும் மடு பிரதேச செயலாளர் பிரிவில் 1 வீடும் சேதமடைந்துள்ளன.
மேலும் மன்னார் எருக்கலம்பிட்டியில் 1 கடையும் கொக்குப் படையான் கிராமத்தில் 1 கடையும் சேதமடைந்துள்ளன.மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவிள்ள பெரியமடு கிராமத்தில் 3 ஏக்கர் பப்பாசிச் செய்கையும் தேவன்பிட்டி, வெள்ளாங்குளம் பகுதியில் 5 ஏக்கர் வாழைத்தோட்டமும் குறித்த காற்றினால் முழுமையாகச் சேதமடைந்துள்ளன.
மேலதிக நடவடிக்கைகளை மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு மேற்கொண்டு வருகின்றது என அவர் தெரிவித்தார்.மன்னார் மாவட்டத்திலுள்ள பல மீனவக் கிராமங்களில் கடந்த செவ்வாய்க் கிழமை மாலை கடல் நீர் கிராமங்களுக்குள் சென்றுள்ள அதேவேளை கடற்கரையில் கட்டி வைக்கப்பட்ட படகுகளும் நீரில் இழுத்தச் செல்லப்பட்டுள்ளதோடு மீனவர்களின் மீன் வாடிகளும் சேதமாகி உள்
ளமை குறிப்பிடத்தக்கது.
———————-
Reported by : Sisil.L