புதுவருடத்தின் பின்னர் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படும். ஆனால் மூன்றாவது அலை உருவாகாது என தொற்று நோயியல் நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். கிறிஸ்மஸின் பின்னரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தது எனத் தெரிவித்துள்ள அவர் ஆனால் அதனை ஆபத்தான மற்றுமொரு அலை எனக் கருத முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்மஸ் காலப்பகுதியில் பொதுமக்கள் அதிகளவு நடமாடியதால் பல கொத்தணிகள் உருவாகின எனத் தெரிவித்துள்ள அவர் புது வருடத்தின் பின்னரும் இதனை எதிர்பார்க்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
Reported by : Sisil.L