இந்தியாவின் அண்டை நாடான பங்களாதேஷில் கொரோனா தொற்று அதிகரித்ததால், கடந்த ஆண்டு நாடு தழுவிய ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது. அதன்பின் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு திரும்பப் பெற்றது.
இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் அதிகரித்து வரும் அதேநிலையில், பங்களாதேஷிலும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் அந்நாட்டில் 6,830 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 50 பேர் பலியாகியுள்ளனர்.
இதனால் முன்னெச்சரிக்கை காரணமாக நாளை 5ஆம் திகதியில் இருந்து ஒரு வாரத்துக்கு நாடு தழுவிய ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என பங்களாதேஷ் அரசு அறிவித்துள்ளது.இதுவரை வங்காளதேசத்தில் 6,24,594 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 9,155 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Reported by : Sisil.L