நாட்டில் ஒட்சிசனுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக பரப்பப்படும் செய்தியை அரசாங்கம் முற்றாக நிராகரித்துள்ளது. இதில் எந்தவொரு உண்மைத் தன்மையும் இல்லை என்று அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். மாத்தறை மாவட்ட கொரோனா செயலணிக் குழுக்கூட்டத்தில் பங்கேற்ற போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நாட்டில் ஒட்சிசன் வழங்கும் பிரதான நிறுவனங்கள் இரண்டின் பிரதானிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்தார்.
நாட்டிலுள்ள வைத்தியசாலைகளில் நாளாந்த ஒட்சிசன் தேவை 22 ஆயிரம் லீற்றர்களாகும். இவ்வாறான நிலையில் குறித்த நிறுவனங்கள் இரண்டும் நாளாந்தம் 67 ஆயிரம் லீற்றர் ஒட்சிசனை உற்பத்தி செய்வதாக அவர் சுட்டிக்காட்டினார்
Reported by : Sisil.L