தென் அமெரிக்க நாடுகள் மற்றும் தென்ஆபிரிக்காவுக்கு கடந்த 14 நாட்களுக்குள் சென்றிருந்த எந்தவொரு விமானப் பயணிக்கும் இலங்கைக்குள் நுழைய அனுமதிக்கப் படமாட்டாது என்று சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.
உடனடியாக குறித்த அறிவிப்பு நடைமுறைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய குறித்த நாடுகளுக்குச் சென்றிருந்த பயணிகள் மற்றும் இடை மாறும் பயணிகள் எவரும் இலங்கையில் தரையிறங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
——————-
Reported by : Sisil.L