டென்மார்க்கில் ‘அஸ்ட்ரா ஜெனிக்கா’ தடுப்பு மருந்தை பயன்படுத்தத் தடை

உலகில் 200க்கும் அதிகமான நாடுகள் கொரோனாவால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் குணமடைந்து வீடு திரும்புகிறார்கள். என்றாலும், புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஏராளமான தடுப்பு மருந்துகள் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இதில் ஒருசில மருந்துகளை செலுத்திக் கொள்வதால் பக்கவிளைவு ஏற்படுவது தெரியவந்தது.

பொதுவாக தடுப்பு மருந்துகளைப் பயன்படுத்தினால் காய்ச்சல், தலைவலி, உடல் வலி, சோர்வு, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படலாம். இவை வழக்கமானதுதான்.

ஆனால் அஸ்ட்ரா ஜெனிக்கா நிறுவனம் தயாரிக்கும் மருந்தைப் பயன்படுத்தும் பெரும்பாலானோருக்கு இரத்தம் உறையும் தன்மை ஏற்படுவதாக

முறைப்பாடுகள் எழுந்தன.

ஒஸ்ட்ரியா நாட்டில் 42 வயதான தாதி ஒருவருக்கு இந்தத் தடுப்பூசி போடப்பட்டது. இதனால் அவருக்கு இரத்தம் உறைதல் பிரச்சினை ஏற்பட்டு அவர் பலியானர்.

இதையடுத்து, அந்த மருந்துப் பயன்பாட்டை ஒஸ்ட்ரியா நிறுத்திக் கொண்டது. இதுதவிர எஸ்டானியா, லட்வியா, லித்வேனியா, லக்சம்பர்க் ஆகிய நாடுகளும் அஸ்ட்ரா ஜெனிக்கா தடுப்பு மருந்தைப் பயன்படுத்துவதை நிறுத்திக் கொண்டன.

தற்போது டென்மார்க்கிலும் இந்த மருந்துக்கு தடை விதிக்கப்பட்டது. இது குறித்து அந்த நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும் போது, ‘மார்ச் 9ஆம் திகதி ஐரோப்பியா நாடுகளில் அஸ்ட்ரா ஜெனிக்கா மருந்து செலுத்தியவர்களில் 22 பேருக்கு இரத்தம் உறைந்ததாக முறைப்பாடுகள் எழுந்தன. எனவே அந்த மருந்து பயன்பாடு எங்கள் நாட்டில் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது’ என்று தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *