ஜூன் 14 பயணத்தடையை நீக்க வேண்டாம்: பொதுச்சுகாதார பரிசோதகர் சங்கம்

நாட்டில் தினசரி கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை
அதிகரித்துள்ள நிலையில்  ஜூன் 14ஆம் திகதி நாடளாவிய ரீதியில் பயணத்தடையை நீக்குவது சாத்தியமில்லை என பொதுச்  சுகாதார  பரிசோதகர்  சஙகத்தின்  தலைவர் உபுல் ரோஹண தெரிவத்தார்.பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும் பலர் வழக்கம் போலவே நடந்துகொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம் 90 சதவீத மக்களின் பயணங்களைக் கட்டுப்படுத்த முடியுமென தாங்கள் எதிர்பார்த்ததாகவும், ஆனால் துரதிர்ஷ்டவசமாக தங்களால் எதிர்பார்த்த வீதத்தைப் பூர்த்தி செய்ய முடியவில்லை என்றும் அவர் கூறினார்.

நகரங்களிலும் கொழும்பிலும் உள்ள ஒவ்வொரு அரசாங்க மற்றும் தனியார் நிறுவனங்களும் அத்தியாவசிய சேவைகளாகச் செயற்படுகின்றன என்றும் அவர் கூறினார்.

அவர்கள் ஒவ்வொரு நாளும் தங்கள் ஊழியர்களை அழைக்கி றார்கள் என்றும் அன்றாடத் தொழில்களில் ஈடுபடும் நபர்கள் மட்டுமே வீட்டில் தங்குகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி புரியும் மக்கள் சாதாரண அன்றாட நடைமுறைகளின் கீழ் செயற்படுகிறார்கள் என்றும் ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால், எந்தவொரு பொதுப் போக்குவரத்து முறையும் செயற்படவில்லை. அதற்கு பதிலாக, மக்கள் தங்கள் தனியார் வாகனங்களில் பயணம் செய்கிறார்கள் என்றும் ரோஹண மேலும் கூறினார்.
——————–
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *