செவ்வாய்க் கிரகத்தில் உயிரினங்கள் இருந்தனவா என்பது குறித்து பல்வேறு ஆய்வுகள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு நிலையம் அனுப்பிய ‘பெர்சவரன்ஸ்’ விண்கலம் கடந்த பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி செவ்வாய்க் கிரகத்தில் வெற்றிகரமாக தரை இறங்கியது. இது செவ்வாய்க் கிரகத்திலுள்ள ஜெஸரோ பள்ளத்தாக்குப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்தப் பகுதியில் உயிரினங்களுக்காக கரிம படிவங்கள் இருக்கின்றனவா என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதற்காக அங்கிருந்து சிறிய அளவிலான மாதிரிகளை இந்த விண்கலம் சேகரித்து பூமிக்கு அனுப்பியுள்ளது.
இந்த விண்கலத்தில் நவீன ஹெலிகாப்டர் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது பெர்சவரன்ஸ் ஆய்வு விண்கலத்துடன் 47.1 கோடி கிலோ மீற்றர் பயணம் செய்து செவ்வாய்க் கிரகத்துக்குச் சென்றுள்ளது.
இந்த ஹெலிகொப்டர், பெர்சவரன்ஸ் ரோவரில் இருந்து இறங்கி செவ்வாய்க் கிரகத்தில் நிறுத்தப்பட்டுள்ள படத்தை நாசா வெளியிட்டுள்ளது. இந்த
ஹெலிகொப்டர் செவ்வாய்க் கிரகத்தில் பறக்கத் தயாராக உள்ளது. இரவு நேரங்களில் இங்கு கடும் குளிர் நிலவுகிறது.
இதனால் அங்கு ஹெலிகொப்டரில் பாகங்கள் உறைந்து பழுதாவதைத் தடுக்க இதில் வெப்பம் உண்டாக்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதனால் வெப்பத்தை உருவாக்கி மின்கலம் மூலம் இந்த ஹெலிகொப்டரை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தயாராக நிற்கும் இந்த ஹெலிகாப்டர் விரைவில் செவ்வாய்க் கிரகத்தில் பறக்கும் என்று நாசா தெரிவித்துள்ளது.
Reported by : Sisil.L
.