சுகாதார வழிகாட்டுதல்களை பொதுமக்கள் மிக மோசமாக மீறுகின்றனர்- பொலிஸ் பேச்சாளர்

கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக அறிவிக்கப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களை பொதுமக்கள் மிகமோசமாக மீறுகின்றனர் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.


இதன் காரணமாக இன்று முதல் சுகாதார வழிகாட்டுதல்களை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளும் சுற்றுநிருபமொன்றை பொலிஸ் தலைமையலுவலகம் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளது.


இந்த சுற்றுநிருபத்தின் கீழ் இன்று முதல் விசேட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


அனேகமானவர்கள் முகக்கவசம் இல்லாமல் நடமாடுகின்றனர் – சமூக விலகலை கடைப்பிடிப்பதில்லை எனவும் ஹோட்டல்களும் ஏனைய நிறுவனங்கள் ஸ்தாபனங்களும் இந்த விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்றுவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *