சினோபார்ம் மற்றும் சினோவெக்ஸ் தடுப்பூசிகளைப் பொறுத்தவரையில் முதலாம் தடுப்பூசியாக சினோபார்மை ஏற்றிக்கொண்டவர்கள் இரண்டாம் தடுப்பூசியையும் ஏற்றியாக வேண்டும். இல்லையேல் எந்தப் பலனும் கிடைக்காது.”இவ்வாறு ஒளடத உற்பத்திகள், விநியோக ஒழுங்குபடுத்துகை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த உலகில் மூன்று விதமான தடுப்பூசிகள் பயன்படுத்தப்படுகின்றன. இதில் எம்.ஆர்.என்.ஏ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டவை பைசர் மற்றும் மொடேனா தடுப்பூசிகளாகும்.
அதேபோல் வைரஸின் வெளிப்படையான புரோட்டின்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக், அஸ்ட்ரா ஜெனகா மற்றும் ஜோன்சன் அன்ட் ஜோன்சன் தடுப்பூசிகள். அதேபோல் கொரோனா வைரஸை பலமிழக்கச் செய்யும் வைரஸைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள சினோபார்ம் மற்றும் சினோவக்ஸ் தடுப்பூசிகள் ஒவ்வொன்றும் தன்மைகளில் மாறுபட்டவை” என்றார்.
————————–
Reported by : Sisil.L