நாளாந்தம் அறிவிக்கப்படும் கொரோனா தொற்றாளர்களை விட இரண்டு, மூன்று மடங்கு கொரோனா தொற்றாளர்கள் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படாமல் சமூகத்திற்குள் இருக்கலாம் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.கொரோனா தொற்றாளர்கள் என அறிவிக்கப்படுபவர்கள் அனைவரும் பரிசோதனை மேற்கொண்டவர்கள் என்றும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படாத ஏராளமான நோயாளர்கள் சமூகத்தில் இருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி முதல் தற்போது வரை 44 ஆயிரம் பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தற்போது செலுத்தப்படும் கொரோனா தடுப்பூசி முடிவடைந்ததும் தற்காலிகமாக இடைநிறுத்தப்படும்.அத்தோடு, கொரோனா தடுப்பூசி கிடைத்த பின்னர் மீண்டும் தடுப்பூசி செலுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
——————-
Reported by : Sisil.L