கொழும்பு மாவட்டத்தில் நேற்று 200 பேருக்கு கொரோனா

இலங்கையில்  நேற்றைய   தினம்  கொரோனா  தொற்றாளர்களாக  அடையாளம்  காணப்பட்ட  1111  பேரில்    200   பேர்   கொழும்பு  மாவட்டத்தைச்  சேர்ந்தவர்கள்  என   கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. இதற்கமைய  இலங்கையில்  கொரோனா  நோயாளர்களின்  எண்ணிக்கையானது  103,487  ஆகவும்  அதிகரித்துள்ளது.

இதேவேளை கம்பஹா மாவட்டத்தில்  198 பேர், குருநாகல்  மாவட்டத்தில்  119 பேர், காலி  மாவட்டத்தில்  86 பேர், கண்டி  மாவட்டத்தில்  74 பேர் , களுத்துறை  மாவட்டத்தில்  70  பேர், நுவரெலியா  மாவட்டத்தில்  55 பேர் , பொலன்னறுவை  மாவட்டத்தில்  41 , மாத்தறை  மாவட்டத்தில்  38 பேர், மொனராகலை  மாவட்டத்தில்  37 பேர் , மாத்தளை   மாவட்டத்தில்  32 பேர், திருகோணமலை  மாவட்டத்தில்  28 பேர், பதுளை  மாவட்டத்தில்  20 பேர் , அம்பாறை  மாவட்டத்தில்  17  பேர் நேற்றைய தினம்   கொரோனா  தொற்றாளர்களாக  அடையாளம்  காணப்பட்டுள்ளனர். இரத்தினபுரி   மற்றும்  அம்பாந்தோட்டை  மாவட்டங்களில்   தலா  15  பேரும்  தொற்றாளர்களாக  அடையாளம்  காணப்பட்டுள்ளனர்.

மேலும்  கேகாலையில்  14  பேர் ,  யாழ்ப்பாணத்தில்  9  பேர், அனுராதபுரத்தில்  7 பேர் , வவுனியாவில்  3 பேர் , புத்தளம்  மற்றும்  மட்டக்களப்பில்  தலா  8 பேர் ,  மன்னார்  மற்றும்  முல்லைத்தீவில்  தலா  ஒருவர்  என்ற  ரீதியில்  தொற்றாளர்கள் அடையாளம்  காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை வெளிநாட்டிலிருந்து வருகை தந்த  15  பேரும்  கொரோனா  தொற்றாளர்களாக  அடையாளம்  காணப்பட்டுள்ளதாக  கொவிட் -19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *