கொழும்பு ஆனந்தாக் கல்லூரியின் ஆசிரியர் ஒருவருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.
குறித்த பாடசாலையின் ஆண் ஆசிரியர் ஒருவரே தொற்றுக்குள்ளாகியுள்ளதாக பொதுச்சுகாதார பரிசோதகர் சங்கச் செயலாளர் எம்.பாலசூரிய தெரிவித்துள்ளார்.கல்லூரியின் விடுதியில் வசித்து வந்த ஆசிரியர் ஒருவருக்கே இன்று தொற்று உறுதியாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.
பாடசாலை விடுதியில் வதியும் சகல ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் மீது சுகாதார அதிகாரிகள் பிசிஆர் சோதனைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர்கள் பாதிக்கப்பட்ட ஆசிரியருடன் தொடர்பைக் கொண்டிருக்கலாம் என்றும் பாலசூரிய கூறினார்
.Reported by : Sisil.L