கொடிகாமம் உட்பட சில கிராம சேவகர் பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன

நாட்டில் 5 மாவட்டங்களைச் சேர்ந்த மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் இன்று முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கமைய கம்பஹா மாவட்டத்தில் வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெரவலப்பிட்டி, வத்தளை, ஹேகித்த மற்றும் பள்ளியாவத்த தெற்கு கிராம சேவகர் பிரிவுகளும் மாபாகே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெரங்ஹா பொக்குண, கல்லுடுபிட, மத்துமஹல ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. 

யாழ். மாவட்டத்தின் கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொடிகாமம் மத்திய மற்றும் வடக்கு கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

களுத்துறை மாவட்டத்தின் களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகொட தெற்கு கிராம சேவகர் பிரிவின் விஜித மாவத்தை பகுதி, வித்யாசார கிராம சேவகர் பிரிவில் போசிறிபுர பகுதி, மஹா வஸ்கடுவ வடக்கு கிராம சேவகர் பிரிவு என்பன உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
————————-

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *