குணசித்திர நடிகர் வெங்கட் சுபா கொரோனாவால் உயிரிழப்பு

பிரபல குணச்சித்திர நடிகர் வெங்கட் சுபா கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த ஒரு மாதமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை காலமாகியுள்ளார்.இரண்டாம் அலை காரணமாக தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் கொரோனாவுக்கு பலியாகி வருகின்றனர். இது ரசிகர்களுக்கு தொடர்ந்து சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.

அசுரன் பட நடிகர் நிதிஷ் வீரா, குணச்சித்திர நடிகர் ஃப்ளோரன்ட் பெரேரா, நகைச்சுவை நடிகர் பாண்டு, ஜோக்கர் துளசி, அருண்ராஜா காமராஜாவின் மனைவி, ஒவ்வொரு பூக்களுமே பாடகர் கோமகன், கில்லி நடிகர் மாறன், சின்னத்திரை நடிகர் குட்டி ரமேஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர்.

இந்நிலையில் பிரபல குணச்சித்திர நடிகர் வெங்கட் சுபா கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த ஒரு மாதமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று  அதிகாலை 12.48 மணியளவில்  காலமானார்.

வெங்கட் சுபா சினிமா மற்றும் சின்னத்திரையில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர். அவர் சொந்தமாக youtube சேனல் தொடங்கி அதில் சினிமா விமர்சனங்கள், பிரபலங்களின் பேட்டிகள் என எடுத்து வெளியிட்டு வந்தார். வெங்கட் சுபாவின் இறப்புக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


தயாரிப்பாளர் டி.சிவா டுவிட்டரில் வெங்கட் சுபா மரணம் பற்றிய செய்தியை அறிவித்திருக்கிறார். “என் நண்பன், சிந்தனையாளன், எழுத்தாளன், படைப்பாளி, நடிகன் #வெங்கட் சற்றுமுன் 12.48 am க்கு இறைவனடி சேர்ந்தார் என்பதை தாள முடியாத வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
————
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *