கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்றுடன் சேர்க்கப்பட்டிருந்த சிறைக் கைதி ஒருவர் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார்.கொரோனாத் தொற்று உறுதியான நிலையில், இயக்கச்சிகொரோனா சிகிச்சை நிலையத்தில் அவர் தங்க வைக்கப்பட்டிருந்தார்.பின்னர் தனக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது என அவர் கூறியதை அடுத்து கிளிநொச்சி மாவட்ட பொது வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், நேற்றுக் காலை குறித்த சிறைக் கைதி வைத்திய சாலையிலிருந்து தப்பிச் சென்றுள்ளார் என்று பொலிஸார்தெரிவித்துள்ளனர். அவரைக் தேடும் நடவடிக்கையில் கிளிநொச்சிப் பொலிஸாரும் பாதுகாப்புத் தரப்பினரும் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேவேளை, நேற்றுமுன்தினம் காலி,பூஸா சிறைச்சாலையிலிருந்து அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கொரோனாத் தொற்றுக்குள்ளான கைதி ஒருவர் மாத்தறை, வல்கம பகுதியில் வைத்து சிறைச்சாலை பஸ்ஸிலிருந்து தப்பிச் சென்றார்.
அவ்வாறே, கொள்ளுப்பிட்டியிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனாத் தொற்றுடைய அம்பாறையைச் சேர்ந்த நபர் ஒருவரும் நேற்றுமுன்தினம் மாலை இவ்வாறு தப்பிச் சென்றார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
தப்பிச் சென்ற கைதிகளைத் தேடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
—————
Reported by : Sisil.L