கினியா நாட்டின் இராணுவத் தளத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் சிக்கி 20 பேர் பலி

கினியா நாட்டின் பேட்டா என்ற பகுதியில் அமைந்துள்ள  இராணுவத் தளத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை டைனமைட்  வெடிபொருள் திடீரென தொடர்ச்சியாக வெடித்துள்ளது. சக்திவாய்ந்த இந்தக் குண்டுவெடிப்பில் சிக்கி 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 600க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த விபத்து தொடர்பாக கினியா ஜனாதிபதி டியோடோரா ஓபியாங் கூறுகையில், டைனமைட் வெடிபொருளை பயன்படுத்தும்பொழுது பாதுகாப்பு விடயங்களை கவனத்தில் கொள்ளவில்லை எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *