கனடாவில் பூர்வீக குடிகளின் சிறுவர்களுக்கான பாடசாலையொன்று முன்னர் இயங்கிய பகுதியில் 251 சிறுவர்களின் உடல்கள் மீட்பு

கனடாவில் பூர்வீககுடிகளின் சிறுவர்களுக்கான பாடசாலையொன்று முன்னர் இயங்கிய பகுதியில் 251 சிறுவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1978இல் மூடப்பட்ட பாடசாலையின்  Kamloops Indian Residential School in British Columbia  மாணவர்களின் உடல்களே அவை எனத் தெரிவித்துள்ள அதிகாரிகள் நிலத்திற்குள் அடியில் உள்ளவற்றை கண்டுபிடிக்கும் ராடார் நிபுணர் ஒருவரின் உதவியுடன் அவற்றை கண்டுபிடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

சிறுவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளமை தனது இதயத்தை நொருங்கச்செய்துள்ளது என டுவிட்டரில் பதிவிட்டுள்ள கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ எங்கள் நாட்டின் வரலாற்றின் இருள்படிந்த வெட்கக்கேடான வரலாற்றை இது நினைவுபடுத்தியுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.கனடாவில் மிக நீண்டகாலமாக பூர்வீகக் குடிகளின் பிள்ளைகளை பெற்றோரிடமிருந்து பலவந்தமாகப் பிரித்து பாடசாலையொன்றில் தங்கவைத்து கல்வி கற்பிக்கும் முறை காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

2015இல் வெளியான விசாரணை முடிவுகளின் போது இது குறித்த பல அதிர்ச்சிகரமான விடயங்கள் தெரியவந்தன.

இந்தப் பாடசாலைகளில் கல்வி கற்ற 150,000 சிறுவர்கள் உடல் ரீதியான துஷ்பிரயோகங்கள், பாலியல் வன்முறைகள் போஷாக்கின்மை உட்பட பல அவலங்களைச்  சந்தித்தமை  இந்த விசாரணையின் போது தெரியவந்தது.

 1840 முதல் 1990 வரை கிறிஸ்தவ தேவாலயங்கள் ஒட்டாவாவின் சார்பில் இந்தப் பாடசாலைகளை இயக்கி வந்தன.இந்தப் பாடசாலைகளில் கல்வி கற்றுக்கொண்டிருந்த 4100 மாணவர்கள் உயிரிழந்தமையும்,இந்த விசாரணைகளில் தெரியவந்தது2008 இல் கனடா இந்த நடவடிக்கைகளுக்காக மன்னிப்பு கோரியது.தற்போது மீட்கப்பட்டுள்ள 215 உடல்கள் குறித்த விபரங்கள் இந்த அறிக்கையில் இடம்பெற்றிருக்காது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

————————————Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *