ஒன்றாரியோ பொலிஸ் கல்லூரியில் கடந்த ஒரு வாரத்தில் 90க்கும் மேற்பட்ட கொவிட்-19 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த வாரம் ஒன்ராறியோவின் அய்மரிலுள்ள கல்லூரியில் கொவிட்-19 தொற்றுப்பரவல் மேலும் பரவுவதைத் தடுக்கும் முயற்சியாக அனைத்து கற்றல்களும் 14 நாட்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளன. இதேவேளை தொற்றாளர்கள் அனைவரும் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட வேண்டும் எனக்
கேட்கப்பட்டுள்ளது.கடந்த வியாழக்கிழமை கொவிட்-19 தொற்றாளர் எண்ணிக்கை 93ஐ எட்டியது.
தென்மேற்கு பொது சுகாதாரத்துக்கான சுகாதார மருத்துவ அதிகாரி மருத்துவர் ஜொய்ஸ் லாக் இதுபற்றிக் கூறுகையில், தொற்றுகளின் எண்ணிக்கை ஆபத்தானது அல்ல எனினும் கொரோனா வைரஸ் அமைப்புகளின் மூலம் எவ்வளவு வேகமாகப் பரவுகிறது என்பதற்கு இது ஒரு தெளிவான எடுத்துக்காட்டு என்றார்.