ஒன்ராறியோவில் வெளிப்புற திருமண வைபவத்தை 50 பேருடன் நடத்த அனுமதி

அடுத்த வாரத்தில் இருந்து 50 பேருடன் வெளிப்புற திருமண வைபவத்தை நடத்த அனுமதி வழங்கப்படுவதாக ஒன்ராறியோ அரசாங்கம் அறிவித்துள்ளது.

மார்ச் 15ஆம் திகதி ஒன்ராறியோ பிராந்தியம், சாம்பல் நிற வலயத்துக்குள் வரவுள்ளது. இதன் பின்னர் திருமணங்கள், இறுதிச்சடங்குகள், மத நிகழ்வுகள் மற்றும் விழாக்களை உள்ளக அரங்கில் 15 வீத ஆசனங்களுடன் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அல்லது வெளிப்புறத்தில் 50 பேருடன் நிகழ்வை நடத்த முடியும் என்றும் ஒன்ராறியோ அரசாங்கம் அறிவித்துள்ளது.

அதேவேளை, சிவப்பு, செம்மஞ்சள், மஞ்சள் மற்றும் பச்சை வலயங்களில் உள்ளவர்கள், திருமண நிகழ்வுகளை உள்ளரங்கில் 30 வீத ஆசனங்களுடனும், வெளியரங்கில் 100 பேருடனும் நடத்தலாம்.

எனினும் இது திருமண நிகழ்வுக்கு மட்டுமே

பொருந்தும் என்றும் வரவேற்புக்குப் பொருந்தாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *