ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நாளையே(செவ்வாய்க்கிழமை) இடம்பெறும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்று திங்கட்கிழமை வாக்கெடுப்பு இடம்பெறவிருந்த நிலையில் திட்டமிடல் சிக்கல்கள் காரணமாக நாளையே வாக்கெடுப்பு இடம்பெறும் என அதிகாரிகளை மேற்கோள் காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.
தீர்மானத்தின் நகல் வடிவின் மீதான வாக்கெடுப்பு மார்ச் 23 ஆம் திகதி இடம்பெறும் எனத் தெரிவித்துள்ள அதிகாரியொருவர் ஆராயப்படவுள்ள முதலாவது தீர்மானம் என்ற அடிப்படையில் ஜெனீவா நேரப்படி காலை 9 மணிக்கு தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இடம்பெறும் எனவும் தெரிவித்துள்ளார்.
Reported by : Sisil.L