எக்ஸ்பிரஸ் பேர்ள்’ கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்க உதவியாக இந்தியா 3 கப்பல்களை அனுப்பியுள்ளது.கொழும்புத் துறைமுகத்தில் இருந்து 9.5 கடல் மைல் தொலைவில் சென்றபோது திடீரென தீப்பிடித்த ‘எக்ஸ்பிரஸ் பேர்ள்’ கப்பல் கொழும்புத் துறைமுகத்துக்கு வெளியே நங்கூரமிடப்பட்டு, தீயணைப்பு பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
மோசமான காலநிலையால் தீ கட்டுக்குள் வரவில்லை. ஆனாலும் கப்பல் சிப்பந்திகள் பத்திரமாக மீட்கப்பட்டு விட்டனர். அந்தக் கப்பலின் தீயை அணைப்பதற்கு இலங்கைக்கு இந்தியா உதவிக்கரம் நீட்டியுள்ளது. இதன்படி கப்பலில் ஏற்பட்டுள்ள நெருப்பை அணைக்கும் பணியில் இந்திய கடலோரக்காவல் படையின் வைபவ், வஜ்ரா மற்றும் சமுத்ரபிரஹரி ஆகிய 3 கப்பல்களை இந்தியா அனுப்பியது. இதைக் கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
குஜராத் மாநிலம் ஹசிராவில் இருந்து கொழும்புக்கு அழகு சாதனப்பொருட்களுக்கான மூலப்பொருட்களை (இரசாயனங்கள்) ஏற்றிக்கொண்டு வந்த ‘எக்ஸ்பிரஸ் பியர்ல்’ என்ற சரக்குக் கப்பலே இவ்வாறு தீ விபத்துக்குள்ளானது.
——————
Reported by : Sisil.L