இழப்பீட்டை செலுத்த கப்பல் உரிமையாளர் இணக்கம்

தீ விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள இழப்பை கணக்கிட்டு செலுத்த குறித்த கப்பலின் உரிமை நிறுவனம் இணங்கியுள்ளதாக வணிகக் கப்பல் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் செனவிரத்ன தெரிவித்தார்.

கப்பல் விபத்து தொடர்பிலும் மற்றும் எதிர்வரும் நடவடிக்கைகள் தொடர்பிலும் தெளிவூட்டும் ஊடக சந்திப்பொன்று நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருந்து தெரிவித்த அவர்,
இழப்பீடு தொடர்பில் கணக்கிட்டு இழப்பீட்டுத் தொகையை வழங்க கப்பலின் உரிமையார்கள் இணக்கம் தெரிவித்துள்ள
னர். காப்புறுதி நிறுவனங்களிடமும் பேச்சுகள் முன்னெடுக்கப்படுகின்றன-என்றார்.
—————-
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *