இலங்கையில் வீதி விபத்துகளால் மூன்று நாட்களில் 40 பேர் பலி: பொலிஸ் பேச்சாளர்

நாட்டில் கடந்த 3 நாட்கள் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 40 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
நேற்று உயிரிழந்த 10 பேரில் நேற்றைய தினம்  மாத்திரம் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 05 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

இந்நிலையில், அதற்கு முன்னர் ஏற்பட்ட வீதி விபத்துகளால் காய மடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச் சை பலனின்றி மேலும் 05 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரி வித்துள்ளார்.


கடந்த ஏப்ரல் 14 ஆம் திகதி 14 பேர் , ஏப்ரல் 15 ஆம் திகதி 16 பேர் மற்றும் நேற்றைய தினம் 10 பேர்   உள்ளடங்கலாக  கடந்த 72 மணிநேரத்தில் 40 பேர் உயிரிழந்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு வார இறுதி நாட்கள் மற்றும் புத்தாண்டு கொண்டாங்களை நிறைவு செய்து விட்டு கொழும்பு திரும்புவோர் மற்றும் தொழிலுக்குச் செல்வதற்காக இன்று அல்லது நாளை வருகை தருவோர் வாகனத்தை மிக அவதானமாக வீதி ஒழுங்கு முறைக்கு அமைவாகச் செலுத்துமாறு அவர் வாகனச் சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *