இலங்கையில் நேற்று 2ஆயிரத்து 906 பேர் கொரோனாவைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்என்று அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.இதன்படி, நாட்டில் கொரோனாத் தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 61 ஆயிரத்து 242 ஆக உயர்வடைந்துள்ளது.கொரோனாத் தொற்று காரணமாக வைத்தியசாலைகள் மற்றும் தனிமைப்படுத்தல் மையங்கள் என்பவற்றில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 115 ஆக அதிகரித்துள்ளது.
அத்தோடு கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 26 ஆயிரத்து 995 ஆக உயர்வடைந்துள்ளது எனவும் அரச தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
————————————
Reported by : Sisil.L