இலங்கையில் கொவிட்-19 தொற்று காரணமாக மேலும் நான்கு மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
இதன்படி நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 575 ஆனது.
உயிரிழந்தவர்களில் 3 ஆண்களும் 1 பெண்ணும் அடங்குவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
86 வயதான பெண் ஒருவர் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கொவிட் தொற்றால் ஏற்பட்ட நிமோனியா காரணமாக கடந்த வியாழனன்று உயிரிழந்துள்ளார்.
மேலும் ஹோமாகமவைச் சேர்ந்த 67 வயதான ஆண் ஒருவரும் புவக்பிட்டியவைச் சேர்ந்த 87 வயதான ஆண் ஒருவரும் கடந்த வியாழக்கிழமை கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை கொழும்பு 14 ஐச் சேர்ந்த 90 வயதான ஆண் ஒருவர் தனது வீட்டில் கடந்த புதன்கிழமை உயிரிழந்துள்ளார். இவர் கொவிட் தொற்றால் ஏற்பட்ட நிமோனியா நிலை காரணமாக உயிரிழந்துள்ளார்
Reported by : Sisil.L