இலங்கையில் இரவு நேர ஊரடங்கை அமுல்படுத்தத் தீர்மானம்

இலங்கையில் நாள்தோறும் இரவு நேரங்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்கை அமுல்படுத்த அரசு தீர்மானித்துள்ளது எனச் செய்திகள் வெளியாகியுள்ளன.
அதற்கமைய இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கை அமுல்படுத்த அரசின் கொரோனாத் தடுப்புக்கான செயலணி முடிவெடுத்துள்ளது என அறிய முடிந்தது.
ஜனாதிபதியின் அனுமதி கிடைத்தவுடன் ஊரடங்கு உத்தரவு  அமுலாகும் தினத்தை அரசு அறிவிக்கவுள்ளது எனவும் தெரியவருகிறது.

எவ்வாறாயினும், அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோருக்கு ஊரடங்கு உத்தரவு எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாது எனவும் அறிய முடிந்தது.
மேலும், ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படும் காலப்பகுதியில் பொருட்கள் கொள்வனவுக்காக வீடுகளிலிருந்து ஒருவர் மாத்திரமே வெளியில் சென்று வர அனுமதி வழங்குவதும், அடையாள
அட்டையின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் நாட்களை ஒதுக்கிக்கொடுப்பது தொடர்பிலும் அரசு அவதானம் செலுத்தி வருகின்றது எனவும் தெரிய வருகிறது.    
————–

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *