நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட சுத்திகரிக்கப்படாத தேங்காய் எண்ணெயில் சுமார் 40 வீதமான நச்சு இரசாயனங்கள் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ இன்று பாராளுமன்றில் தெரிவித்தார்.
மலிவான தேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்ய நிறுவனங்கள் மேற்கொண்ட முயற்சியே இதற்குக் காரணம் என்றும் அவர் கூறினார்.
மனித பாவனைக்குப் பொருத்தமற்ற சுத்திகரிக்கப்படாத தேங்காய் எண்ணெய் குறித்து இன்று பாராளுமன்றில் வினா தொடுக்கப்பட்டது.இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெயை சந்தைக்கு விடுவது மனித நுகர்வுக்கு பொருத்தமற்றதா என்பதை மறு பரிசோதனை செய்யும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன இதன்போது தெரிவித்தார்.இதனிடையே மனித நுகர்வுக்குப் பொருத்தமற்றது என சுகாதார அமைச்சின் உணவுப்பிரிவு நிராகரித்த சுத்திகரிக்கப்படாத தேங்காய் எண்ணெயை அழிக்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.மார்ச் 4ஆம் திகதி இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெயில் அஃப்லாடொக்சின் அதிக சதவீதம் உள்ளது. ஆனால் அது முழுமையாக சுத்திகரிக்கப்படாதது என ஓர் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. எனவே தேங்காய்
எண்ணெயை இதே முறையில் மீண்டும் ஏற்றுமதி செய்யுமாறு சுங்கத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் எமக்கு அறிவுறுத்தியுள்ளார் என அமைச்சர் மேலும் கூறினார்.
Reported by : Sisil.L