இராவணா எல்ல பாதுகாப்பு வனப்பகுதியில் பெருந்தீப்பரவல்;100 ஏக்கர் எரிந்து நாசம்

எல்ல பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இராவணா எல்ல பாதுகாப்பு வனப்பகுதியில் பெருந்தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இவ்வனப்பகுதி நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் தீப்பற்றி எரிவதாக அறியவருகிறது. சுமார் 100 ஏக்கர் வனப்பகுதி முற்று முழுதாக எரிந்து நாசமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

பெருமளவிலான சரிவுகள் மற்றும் பாறைகளைக் கொண்ட இந்த வனப்பகுதியில் தீயைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம் என பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவிக்கிறது.தீ பரவலைக் கட்டுப்படுத்த இராணுவம், பொலிஸார், வனஜீவராசிகள், வனபாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவி இயக்குநர் உதயகுமார தெரிவித்தார்இன்று காலை முதல் தீ வேகமாகப் பரவி வருவதாகவும் இவ்வனப்பகுதியானது அரிய வகை வனவிலங்குகள், பறவைகள், வண்ணத்துப்பூச்சிகள் என்பவற்றின் வாழிடமாகும் என்றும் கூறப்படுகிறதுதீயைக் கட்டுப்படுத்த விமானப்படையின் உதவி நாடப்பட்டுள்ளதாகவும் பண்டாரவளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அதுல டி சில்வா தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *