இந்தோனேசியாவில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த நீர்மூழ்கிக் கப்பல் 53 இராணுவ வீரர்களுடன் மாயம்

இந்தோனேஷியாவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள பாலித் தீவு அருகே அந்த நாட்டு இராணுவத்துக்குச் சொந்தமான ‘நங்கலா 402′ என்கிற நீர்மூழ்கிக் கப்பல் நேற்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. இந்த நீர்மூழ்கிக் கப்பலில் இராணுவ 53 வீரர்கள் இருந்தனர்.

இந்த நிலையில் பாலித் தீவிலிருந்து 95 கிலோ மீற்றர் தொலைவில் கடலில் பயணித்துக் கொண்டிருந்தபோது நீர்மூழ்கிக் கப்பல் திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து மாயமானது. நீர்மூழ்கிக் கப்பல் என்ன ஆனது, அதில் உள்ள 53 வீரர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை.‌

இதையடுத்து அங்கு போர்க் கப்பல்கள் குவிக்கப்பட்டு மாயமான நீர்மூழ்கிக் கப்பலைத் தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் இராணுவத் தளபதி தஜ்ஜான்டோ கூறினார்.

மேலும் நீர்மூழ்கி மீட்புக் கப்பல்களை வைத்துள்ள அவுஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூரிடம் உதவி கோரியுள்ளதாகவும் தஜ்ஜான்டோ தெரிவித்தார்.

காணாமல்போன நீர்மூழ்கியிலிருந்து எந்த சமிக்ஞைகளும் வெளியாகவில்லை என இந்தோனேசியா தெரிவித்துள்ளது.
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *